மயிலாடுதுறை அருகே பெரம்பூர் போலீசார் வாகன தணிக்கையில் டவேரா காரில் கடத்திவரப்பட்ட 800 லிட்டர் சாராயம் காருடன் பறிமுதல். தப்பியோடிய குற்றவாளியை வலைவீசி தேடி வருகின்றனர் :-

செய்திகள்

மயிலாடுதுறை அருகே பெரம்பூர் போலீசார் வாகன தணிக்கையில் டவேரா காரில் கடத்திவரப்பட்ட 800 லிட்டர் சாராயம் காருடன் பறிமுதல். தப்பியோடிய குற்றவாளியை வலைவீசி தேடி வருகின்றனர் :-

மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் சாராயம் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் பெரம்பூர் காவல் ஆய்வாளர் நாகவல்லி தலைமையில் போலீசார் வழுவூர் பகுதியில் உள்ள ரயில்வேகேட் அருகில் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக வேகமாக வந்த டவேரா காரினை நிறுத்தி உள்ளனர்.

காரை ஓட்டி வந்த நபர் போலீசாரை கண்டதும் காரை அதே இடத்தில் விட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். உடனடியாக போலீசார் காரை சோதனை செய்தபோது 1 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 800 லிட்டர் சாராயம் மூட்டை மூட்டையாக காரைக்காலில் இருந்து கடத்திவரப்பட்டது தெரியவந்தது. தொடர்ந்து காவல்துறையினர் கடத்தலுக்கு பயன்படுத்திய கார் மற்றும் சாராய மூட்டைகளை பறிமுதல் செய்து காவல்நிலையம் எடுத்து சென்றனர். சாராயத்தை கடத்த வந்த நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.