மயிலாடுதுறை மாவட்டத்தில் பிளஸ்2 பொதுத்தேர்வில் சிறப்பிடம் பிடித்த மாணவர்களுக்கு நடைபெற்ற பாராட்டுவிழாவில் எம்எல்ஏ ராஜகுமார் கலந்துகொண்டு தங்கப்பதக்கம் மற்றும் தலா ரூ.3,000 ரொக்கப்பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்தார்:-

செய்திகள்

மயிலாடுதுறை மாவட்டத்தில் பிளஸ்2 பொதுத்தேர்வில் சிறப்பிடம் பிடித்த மாணவர்களுக்கு நடைபெற்ற பாராட்டுவிழாவில் எம்எல்ஏ ராஜகுமார் கலந்துகொண்டு தங்கப்பதக்கம் மற்றும் தலா ரூ.3,000 ரொக்கப்பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்தார்:-

பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை ஆசாத் பெண்கள் மெட்ரிகுலேசன் பள்ளி மாணவி சாய் கண்ணம்மை 595 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தையும், குருஞானசம்பந்தர் மிஷன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி ரதிசந்திரிகா 593 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடத்தையும்,  டார்கெட் சில்வர் ஜூப்ளி மாணவர் ஆதித்யா 590 மதிப்பெண் பெற்று மூன்றாம் இடத்தையும் பிடித்தனர். மேலும், திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த பழங்குடியின மாணவி ஜெசித்திலா என்பவர் தேர்ச்சி பெற்றார்.

இவர்களுக்கு மயிலாடுதுறையில் ட்ரீம்ஸ் இந்தியா பவுன்டேஷன் என்ற அமைப்பின் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. தேர்தல் தனிவட்டாட்சியர் விஜயராகவன் தலைமையில் நடைபெற்ற விழாவில், மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினர் ராஜகுமார் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு, மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ், நினைவுப்பரிசு, தங்கப்பதக்கம் மற்றும் தலா ரூ.3,000 ரொக்கப்பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்தார். நிகழ்ச்சியில் மாணவி ரதி சந்திரிகாவின் மேற்படிப்புக்கு உதவிடும் வகையில் அவரது கல்விக்கட்டணத்தில் 50 சதவீத தொகையை ட்ரீம்ஸ் இந்தியா அமைப்பு ஏற்றுக்கொண்டது. இதில், அமைப்பின் தலைவர் விஜயன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.