குமரிக்கடல் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் நீடிக்கும் காற்று சுழற்சியின் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த ஓரிரு தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, கோமல், குத்தாலம், செம்பனார்கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. செம்பனார்கோவிலில் மயிலாடுதுறை – தரங்கம்பாடி நெடுஞ்சாலையில் 50 ஆண்டுகால பழமையான புளிய மரம் காற்றுடன் கூடிய மழையின் காரணமாக வேரோடு சாய்ந்து சாலையின் குறுக்கே விழுந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து தீயணைப்பு நிலைய வீரர்கள் அங்கு சென்று மரத்தை அறுத்து அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
