மறைந்த பாரத பிரதமர் ராஜீவ் காந்தியின் 33 வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதயொட்டி மயிலாடுதுறை ராஜீவ் காந்தி விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் அமைக்கப்பட்டுள்ள ராஜீவ் காந்தியின் திரு உருவ சிலைக்கு மயிலாடுதுறை மாவட்ட காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து மலர் தூவி நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. மாவட்ட காங்கிரஸ் தலைவரும் மயிலாடுதுறை எம்எல்ஏவுமான ராஜகுமார் மற்றும் மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் பண்ணை சொக்கலிங்கம் உள்ளிட்ட நிர்வாகிகள் மாலை அணிவித்தனர். தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் மலர் தூவி நினைவஞ்சலி செலுத்தினர். இதேபோன்று மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள ராஜீவ் காந்தி சிலைகளுக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.