நியாய விலைக்கடைகளில் பருப்புவகைகள் இருப்பு இல்லாததால் பொதுமக்கள் அவதி:- பொருள்கள் வழங்குவதில் காலதாமதம் ஏற்படுவதாகவும் குற்றச்சாட்டு.

செய்திகள்

மயிலாடுதுறை மாவட்டத்தில் நியாய விலைக்கடைகளில் பருப்புவகைகள் இருப்பு இல்லாததால் பொதுமக்கள் அவதி:- பொருள்கள் வழங்குவதில் காலதாமதம் ஏற்படுவதாகவும் குற்றச்சாட்டு:-

மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, குத்தாலம், தரங்கம்பாடி, சீர்காழி ஆகிய நான்கு தாலுக்காக்களிலும் முழுநேர நியாயவிலை கடை, பகுதி நேர நியாயவிலை கடை என 432 கடைகள் உள்ளன. கடைகள் மூலம் ஒவ்வொரு மாதமும் 1-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதிக்குள் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பருப்பு, பாமாயில், சர்க்கரை, கோதுமை மற்றும் அரிசி ஆகிய பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது மாவட்டத்தில் உள்ள பல்வேறு நியாய விலை கடைகளில் பருப்பு இருப்பு இல்லை என்றும் அடுத்த வாரம் வந்துவிடும், அப்போது வந்து வாங்கிக் கொள்ளுங்கள் என்றும் கடை ஊழியர்கள் கூறுவதாகவும், கடந்த மாதமும் இதே போல் கூறி அலக்கழிப்பதாகவும் பொதுமக்கள் வேதனையுடன் குற்றம்சாட்டுகின்றனர்.

இதுகுறித்து மாவட்ட வட்ட வழங்கல் அலுவலரை தொடர்பு கொண்டு கேட்டபொழுது, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் மூலம் மாவட்டத்திற்கு தேவையான பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டு அனைத்து நியாய விலைக்கடைகளிலும் இருப்பு வைக்கப்பட்டு, விநியோகம் செய்யப்படும். ஆனால் தற்பொழுது தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ளதால் வாகனங்கள் பொருட்கள் ஏற்றி வருவதற்கு காலதாமதம் ஆகிறது. ஆறு மாதத்திற்கு ஒரு முறை டெண்டர் விடுவதாகவும் இந்த முறை காலதாமதம் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தார். எனவே ஓரிரு நாட்களில் பொருட்கள் வந்துவிடும், அதன்பின்னர் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொருட்கள் விநியோகம் செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *