புனித அந்தோணியார் கோயிலில் 28 ஆம் ஆண்டு தேர் திருவிழா; மின் ஒளியில் அலங்கரிக்கப்பட்ட தேரில் புனித மேரிமாதா, புனித அந்தோணியார் மற்றும் புனித சம்முன்ஸ் சொரூபங்கள் வீதி உலா:-

செய்திகள்

மயிலாடுதுறை அருகே கஞ்சாநகரம் கிராமத்தில் புனித அந்தோணியார் கோயிலில் 28 ஆம் ஆண்டு தேர் திருவிழா; மின் ஒளியில் அலங்கரிக்கப்பட்ட தேரில் புனித மேரிமாதா, புனித அந்தோணியார் மற்றும் புனித சம்முன்ஸ் சொரூபங்கள் வீதி உலா

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா கஞ்சாநகரம் கிராமத்தில் புனித அந்தோணியார் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தின் 28-ஆம் ஆண்டு தேர் திருவிழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு ஆத்துகுடி பங்குத்தந்தை மரியதாஸ் அடிகளார் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. தொடர்ந்து, மின் ஒளியில் அலங்கரிக்கப்பட்ட 3 திருத்தேர்களில் புனித மேரிமாதா புனித அந்தோணியார் மற்றும் புனித சம்முன்ஸ் சொரூபங்கள் தனித்தனியே எழுந்தருளச் செய்யப்பட்டு வீதி உலா நடைபெற்றது. வீடுகள் தோறும் பொதுமக்கள் மெழுகுவர்த்தி, மாலை வழங்கி வழிபாடு நடத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *