மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி புதிய பேருந்து நிலையம் அருகில் அருண் என்பருக்கு சொந்தமான கணினி உதிரி பாகங்கள் விற்பணை கடை உள்ளது. இவர் வழக்கம் போல் கடையை திறந்த போது கடை உள்ளே வித்தியாசமான சப்தம் கேட்டுள்ளது. அந்த சப்தம் கேட்ட இடத்தை பார்த்த போது அங்கு ஏழு அடி நீளம் கொண்ட பெரிய பாம்பு ஒன்று இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். உடனடியாக சீர்காழியை சேர்ந்த பாம்பு பிடி வீரரான பாம்பு பாண்டியனுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அங்கு வந்த பாம்பு பாண்டியன் கடையின் அலமாரிக்கு பின்புறம் பதுங்கி இருந்த 7 அடி நீளமுள்ள மஞ்சள் சாரை பாம்பை லாவகமாக பிடித்தார். கடைக்கு உள்ளே எலியை வேட்டையாட வந்த பாம்பு திரும்பி வெளியே செல்ல வழி தெரியாமல் கடைக்கு உள்ளேயே மறைந்துள்ளது தெரியவந்தது. பிடிபட்ட பாம்பு பாதுகாப்பான வனப்பகுதியில் விடப்பட்டது.