மயிலாடுதுறையில் மாவட்ட ஆட்சியரின் இறுக்கமான மனநிலையை மாணவி ஒரே ஒரு பாடல் மூலம் மாற்றியதாக புகழாரம். புன்னகை முகத்துடன் ஆட்சியர் கலைத்திருவிழாவில் மாநில அளவில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார் :-

செய்திகள்

மயிலாடுதுறையில் மாவட்ட ஆட்சியரின் இறுக்கமான மனநிலையை மாணவி ஒரே ஒரு பாடல் மூலம் மாற்றியதாக புகழாரம். புன்னகை முகத்துடன் ஆட்சியர் கலைத்திருவிழாவில் மாநில அளவில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார் :-

மயிலாடுதுறையில் உள்ள கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட மாநில அளவில் நடைபெற்ற கலைத்திருவிழா போட்டியில் வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி கலந்து கொண்டு மாநில அளவில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற 11 பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் மாவட்ட அளவில் வெற்றி பெற்ற 143 மாணவ மாணவிகளுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழை ஆட்சியர் வழங்கினார். மேலும் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் மற்றும் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது. அப்போது மாநில அளவில் பாட்டு போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மாணவி மேடையில் பாடல் பாடி அசத்தினார். கற்பூர பொம்மை ஒன்று எனத் தொடங்கும் பாடலை மாணவி பாடிய நிலையில் மாவட்ட ஆட்சியர் மற்றும் அங்கிருந்த மாணவர்கள் மனம் உருகி கேட்கத் தொடங்கினர்.

பின்னர் நிகழ்ச்சி மேடையில் பேசிய மாவட்ட ஆட்சியர் மகாபாரதி ஆட்சியர் அலுவலகத்தில் பல்வேறு வேலைகள் இருக்கும் நிலையில் என்னென்ன பிரச்சனைகள் எப்படி வரும் என தங்களுக்கு தெரியும் என்றும் , தான் இந்த நிகழ்ச்சிக்கு ஒரு வித மன இறுக்கத்தில் வந்ததாகவும் , பின்னர் நிகழ்ச்சியில் பங்கேற்று மாணவியின் பாடலைக் கேட்டவுடன் முழுமையாக தான் ரிலாக்ஸ் ஆகிவிட்டதாகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். மிகவும் எழ்மையான வகுப்பில் கிராமப்புறத்தில் இருந்து வந்து சிறப்பாக பாடல் பாடிய சிறுமியை பார்க்கும்போது மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்தார். படிப்பு மட்டும் வாழ்க்கையில் உறுதுணையாக இருக்காது என்றும் , அதை தாண்டி மற்ற கலைகளையும் கற்றுக்கொண்டால் தான் சமுதாயத்தில் ஜெயிக்க முடியும் என அறிவுரை வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *