மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பிடாரி தெற்கு வீதி, இதே போல் தேர் மேலவீதி ஆகிய இரு இடங்களில் ஜவுளிக்கடை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இரவு 2 கடைகளில் பூட்டுக்கள் உடைக்கப்பட்டு கடையில் இருந்த சுமார் ரூ 2 லட்சம் பணம் கொள்ளை போனது பெரிய வந்தது. இதுகுறித்து தேர் மேலவீதியில் செயல்படும் ஜவுளிக்கடை உரிமையாளர் கலிவரதன் (வயது 37) என்பவர் சீர்காழி காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
புகாரின் அடிப்படையில் சீர்காழி காவல் ஆய்வாளர் சிவக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை செய்தனர். மேலும் இது தொடர்பாக கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வழக்கு பதிவு செய்து அருகில் உள்ள சிசிடிவி கேமராக்கள் பதிவை கொண்டு தீவிர விசாரணை செய்தனர். இதில் தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் பகுதியை சேர்ந்த முகமது பாகத் (வயது 25) என்பவர் ஜவுளி கடையின் பூட்டை உடைத்து கடையில் இருந்த பணத்தை திருடியது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து முகமது பாகத்தை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.