இன்று உலக பட்டினி தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் சார்பில் தமிழகம் முழுவதும் அன்னதானம் வழங்க தலைவர் விஜய் அறிவுறுத்தியதன் பேரில் மயிலாடுதுறையில் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் அன்னதான விழா நடத்தினர்.
மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு மாவட்ட இளைஞரணி தலைவர் ராஜ்குமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் குட்டி கோபி 300க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு வெஜிடபிள் பிரியாணி, தயிர் சாதம், தண்ணீர் பாட்டில் ஆகியவற்றை வழங்கினர். ஏராளமான பொதுமக்கள் அன்னதானத்தை பெற்று மகிழ்ச்சியுடன் உண்டனர்.