ரேவதி நகரில் அமைந்துள்ள வலம்புரி விநாயகர் கோயிலில் மகா கும்பாபிஷேகம். ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு.

செய்திகள்

மயிலாடுதுறை, கூறைநாடு, ரேவதி நகரில் அமைந்துள்ள வலம்புரி விநாயகர் கோயிலில் மகா கும்பாபிஷேகம். ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர்:-

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை, கூறைநாடு ரேவதி நகரில் வலம்புரி விநாயகர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிட்டு திருப்பணிகள் தொடங்கி நடைபெற்று வந்த நிலையில் அண்மையில் பணிகள் நிறைவுற்றது. இதையடுத்து நேற்று முதல் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. தொடர்ந்து கும்பாபிஷேக தினமான இன்று காலை இரண்டாம் கால யாகசாலை பூஜை தொடங்கி பூர்ணாஹூதி மற்றும் மகா தீபாராதனை காட்டப்பட்டது.

தொடர்ந்து பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கடங்களை சிவாச்சாரியார்கள் தங்கள் தலையில் சுமந்து விமான கும்பத்தை அடைந்து கோபுர கலசத்தில் புனித நீரானது ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகமானது நடைபெற்றது. தொடர்ந்து மூலவருக்கு மகா அபிஷேகம் செய்து தீபாராதனை காட்டப்பட்டது‌. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *