“அதிமுக சிதைந்து கிடப்பதால் டெல்டாவில் வெற்றி பெறும் அமைப்பே கிடையாது” மயிலாடுதுறையில் நடைபெற்ற திமுக பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் அமைச்சர் மெய்யநாதன் பேச்சு .

செய்திகள்

"அதிமுக சிதைந்து கிடப்பதால் டெல்டாவில் வெற்றி பெறும் அமைப்பே கிடையாது" மயிலாடுதுறையில் நடைபெற்ற திமுக பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் அமைச்சர் மெய்யநாதன் பேச்சு

மயிலாடுதுறையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இந்தியா கூட்டணி சார்பில் மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் சுதாவை ஆதரித்து நகர திமுக சார்பில் பொது உறுப்பினர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் பங்கேற்று சிறப்புரையாற்றினார் நிர்வாகிகள் தேர்தலில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த ஆலோசனைகள் வழங்கப்பட்டது. 

அப்பொழுது பேசிய அமைச்சர் மெய்யநாதன் கூறுகையில் அதிமுக கட்சி சிதைந்து கிடப்பதாகவும், தொடர்ந்து டெல்டாவில் வெற்றி பெற அதிமுகவில் எடப்பாடி தலைமையில் உள்ள அணிக்கு எந்த அமைப்புமே கிடையாது என விமர்சித்தார். எனவே நகரத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் நமது காங்கிரஸ் வேட்பாளர் சுதாவை வெற்றி பெறச் செய்து சாதனையை நிகழ்த்த வேண்டுமென நிர்வாகிகளிடம் கேட்டுக் கொண்டார்.

மேலும் மயிலாடுதுறையின் முக்கிய பிரச்சனையான  பாதாள சாக்கடை திட்டத்திற்கு கூடுதலாக நிதி பெற்று வருகின்ற சட்டமன்றத் தேர்தலுக்குள் நகராட்சிக்கு தேவையான அனைத்து கோரிக்கைகளையும் நிவர்த்தி செய்து தருவோம் என உறுதி அளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *