புதிதாக அமைக்கப்பட்ட சிமென்ட் சாலையில் விரிசல். தரமற்ற முறையில் சாலை பணிகள் நடைபெற்றதால் பல்வேறு இடங்களில் வெடிப்பு. சாலையில் பெயின்ட் அடிக்க வந்தவர்களை திருப்பி அனுப்பிய பொதுமக்கள். சாலையை சீரமைத்துதர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை.

செய்திகள்

மயிலாடுதுறை அருகே கிழாய் கிராமத்தில் புதிதாக அமைக்கப்பட்ட சிமென்ட் சாலையில் விரிசல். தரமற்ற முறையில் சாலை அமைத்ததால் பல்வேறு இடங்களில் வெடிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், சாலையில் பெயின்ட் அடிக்க வந்தவர்களை திருப்பி அனுப்பிய பொதுமக்கள் சாலையை ஆய்வு செய்து சீரமைத்துதர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்:-

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை ஒன்றியத்திற்கு உட்பட்ட கிழாய் கிராமம் தெற்கு தெரு பாரதிநகரில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் 20 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டது. தரமற்ற முறையில் சாலை அமைப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியிருந்தனர். 300 மீட்டர் தூரம் புதிய சிமென்ட் சாலை அமைத்து 2 மாதங்களே ஆன நிலையில்  சிமென்ட் சாலையில் பல்வேறு இடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. சிமென்ட் சாலை தரமாக அமைக்காததால் சாலையில் வெடிப்பு ஏற்பட்டு ஜல்லிகற்கள் பெயர்ந்து வருவதாகவும் அப்பகுதி பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

நேற்று புதிய சிமெண்ட் சாலையில் பெயிண்ட் அடிப்பதற்காக வந்த தொழிலாளர்களை தடுத்து நிறுத்தி  விரிசல்விட்ட சாலையை சரிசெய்து தந்துவிட்டு பணிகளை செய்யுங்கள் என்று திருப்பி அனுப்பிவிட்டனர். சாலை பணிகளை தடுத்ததாக தங்கள் மீது புகார் அளிப்பதாக பலர் மிரட்டுவதாக கூறிய பொதுமக்கள் சாலை தரமாக போடாதது குறித்து நாங்கள் கேட்காமல் யார் கேட்பார்கள் என்று கேள்வி எழுப்பினர். புதிதாக போடப்பட்ட சிமென்ட் சாலையை ஆய்வு செய்து சீரமைத்துதர வேண்டும் என்றும் சிமென்ட் சாலையை சரிசெய்தபிறகே ஒப்பந்ததாரர்களுக்கு மாவட்ட நிர்வாகம் பணம் வழங்க வேண்டும் என்றும் அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *