சீர்காழி அருகே திருநகிரி மற்றும் திருவாலி கிராமத்தில் 10.5 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு புதிய மின்மாற்றிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி மின் கோட்டம் திருவெண்காடு பிரிவுக்கு உட்பட்ட திருநகரி மற்றும் திருவாலி கிராமங்களில் கிராம மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் 63 கிலோ வாட் திறன் கொண்ட இரண்டு புதிய மின்மாற்றிகள் நிறுவப்பட்டது. அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம் அதனை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
இந்த நிகழ்வில் சீர்காழி கோட்ட பொறியாளர் லதா மகேஸ்வரி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உதவி செயற்பொறியாளர்கள் விஜய பாரதி, விஸ்வநாதன், திருவெண்காடு உதவி மின் பொறியாளர் ரமேஷ்குமார், சீர்காழி திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் பஞ்சுகுமார் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் கிராம முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.