நேபாளில் நடைபெற்ற ஏசியன் பாரா த்ரோபால் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற மாற்றுத்திறனாளிக்கு பல்வேறு அமைப்பினர் பாராட்டு:-
நேபாளில் நடைபெற்ற ஏசியன் பாரா த்ரோபால் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற மாற்றுத்திறனாளிக்கு மயிலாடுதுறையில் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கத்தினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் சால்வை அணிவித்து, திறந்தவெளி வாகனத்தில் அழைத்துச்சென்று பாராட்டு:-
நேபாளம் காட்மாண்டுவில் கடந்த 21-ஆம் தேதி நடைபெற்ற ஏசியன் பாரா த்ரோபால் (எறிபந்து) போட்டியில் நேபாள், பங்களாதேஷ், இந்தியா ஆகிய நாடுகள் பங்கேற்றன. இப்போட்டியில் இந்தியா முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றது. இந்திய அணியில் தமிழகம் சார்பில் மயிலாடுதுறையைச் சேர்ந்த கார்த்திகேயன், கோயமுத்தூரைச் சேர்ந்த மோகன் ஆகியோர் கலந்துகொண்டு விளையாடினர்.
இந்நிலையில், தங்கப்பதக்கம் வென்று சொந்த ஊருக்கு திரும்பிய விளையாட்டு வீரர் கார்த்திகேயனுக்கு மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் பல்வேறு அமைப்புகளின் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல பாதுகாப்போர் சங்கம் சார்பில் மாவட்ட செயலாளர் கணேசன், மயிலாடுதுறை தமிழ்ச் சங்க நிறுவனர் பவுல்ராஜ், அறம் செய் அறக்கட்டளை சிவா உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் கார்த்திகேயனுக்கு சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தனர். தொடர்ந்து, அவரை திறந்தவெளி வாகனத்தில் அழைத்துச்சென்று பாராட்டு தெரிவிக்கப்பட்டது.