முதல்வர் பிறந்தநாளில் முதல் எஸ்டி சான்றிதழ் வழங்கி வரலாற்று சாதனை புரிய தமிழக அரசுக்கு கோரிக்கை

செய்திகள்

முதல்வர் பிறந்தநாளில் முதல் எஸ்டி சான்றிதழ் வழங்கி வரலாற்று சாதனை புரிய தமிழக அரசுக்கு கோரிக்கை.

நரிக்குறவர் இனத்தை எஸ்சி, எஸ்டி பிரிவில் இணைத்த தமிழக முதல்வருக்கு நன்றி முதல்வர் பிறந்தநாளில் முதல் எஸ்டி சான்றிதழ் வழங்கி வரலாற்று சாதனை புரிய  தமிழக அரசுக்கு கோரிக்கை வைப்பதாக மாநில கூட்டத்தில் தீர்மானம்.

மயிலாடுதுறையில் தமிழ்நாடு நரிக்குறவர் குருவிக்காரர் பழங்குடியினர் நல பேரவையின்  கல்வி பொருளாதார மேம்பாடு விளக்க மாநில கூட்டம்  விஜய்சுந்தரம் தலைமையில் நடைபெற்றது. பேரவையின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெய்சங்கர் கலந்துகொண்டு உரையாற்றினார், 14 மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கலந்துகொண்ட கூட்டம் நடைபெற்றபோது 70 ஆண்டுகளாக கிடப்பில் கிடந்த எஸ்டி உரிமையை  பெற்றுத்தந்த மாநில அரசுக்கு நன்றி தெரிவிப்பதாகவும்,  நரிக்குறவர் இனமக்களது எஸ்டி உரிமை முழுமைபெற பேரவையினர் திட்டமிடுதலில் இறங்கியுள்ளதாகவும்  கல்விக்குழு, பொருளாதாரக்குழு, அடிப்படை வசதிக்கான குழு, பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சிக்குழு உரிமைகள் பாதுகாப்புக்குழு என அமைத்துள்ளதாகவும்  தெரிவித்தனர்.

 

 

எஸ்டிக்கான சலுகையை முழுமையாகப் பெறுவதற்கு நரிக்குறவர் இன மக்களுக்கு எஸ்டி சான்றிதழை உடனடியாக அளித்தால் கல்வி வேலைவாய்ப்பிற்காக காத்திருக்கும் நரிக்குறவ இன மக்களுக்கு மிகவும் பிரயோஜனமாக இருக்கும் எனவும் கொரோனா காலத்தில் கட்ட மடியாமல் போன வங்கிக் கடன்சுமையை தள்ளுபடி  செய்து தரவேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம்  எஸ்டிக்கான. முதல் சான்றிதழை தமிழ்நாடு முதல்வர் பிறந்தநாளன்று வழங்கினால் காலா காலத்திற்கும் மறக்காத நினைவாக இதுஇருக்கும் என கோரிக்கை வைத்தனர்.