மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை பாராட்டிய வெளிநாட்டு சுற்றுலா பெண் பயணி.
தரங்கம்பாடி கடற்கரையில் ஆய்வின்போது வெளிநாட்டு சுற்றுலாப் பயணிக்கு பிளாஸ்டிக் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மஞ்சள் பை வழங்கிய மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை பாராட்டிய வெளிநாட்டு சுற்றுலா பெண் பயணி.
மயிலாடுதுறை மாவட்டத்தில் புகழ்பெற்ற சுற்றுலாத்தலமாக தரங்கம்பாடி கடற்கரை உள்ளது. இங்கு 17 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட டேனிஷ் கோட்டை அமைந்துள்ளது கடல் சீற்றம் காரணமாக டேனிஷ் கோட்டை பாதிக்கும் அபாயம் உள்ளதால் பொதுப்பணித்துறை சார்பில் 110 மீட்டர் நீளத்தில் 11 அடி உயரத்தில் ரூபாய் 8.6 லட்சம் மதிப்பீட்டில் அலை தடுப்புச் சுவர் அமைக்கும் பணியினை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது தரங்கம்பாடி பேரூராட்சி தலைவர் சுகுண சங்கரி குமரவேல், தரங்கம்பாடி பேரூராட்சி செயல் அலுவலர் கமலக்கண்ணன் உடன் இருந்தனர்.
மேலும் ஆய்வின் போது பிளாஸ்டிக் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மீண்டும் மஞ்சள் பை திட்டத்தின் கீழ் தரங்கம்பாடி கடற்கரைக்கு வந்திருந்த டென்மார்க் நாட்டைச் சார்ந்த கரீம் என்ற சுற்றுலா பயணிக்கு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தரங்கம்பாடி பேரூராட்சி சார்பில் மஞ்சள் பையை வழங்கினார்.
மஞ்சள் பையை பெற்றுக் கொண்ட வெளிநாட்டு பெண் சுற்றுலா பயணி கூறியதாவது :
நான் இங்கு கடந்த முறை வந்த போதும் அதிகப்படியான பிளாஸ்டிக் பொருட்களை பார்த்தேன். இப்போதும் பார்க்கின்றேன் இதை ஒழிக்க அரசு எடுத்த முயற்சி சிறப்பானது. இத்திட்டத்தை பள்ளி கல்லூரியில் இருந்து துவங்க வேண்டும் மேலும் பிளாஸ்டிக் ஒழிப்பு மீண்டும் மஞ்சள் பை திட்டத்திற்கு என்னுடைய வாழ்த்துக்கள் என அவர் தெரிவித்தார்.