தமிழ் தற்போது வேகமாக செத்துக் கொண்டிருக்கிறது. வணிக நிறுவனங்களில் பிற மொழிகளில் வைக்கப்படும் பெயர் பலகைகளை நீக்க 30 நாட்கள் அவகாசம் கொடுங்கள்.

செய்திகள்

தமிழ் தற்போது வேகமாக செத்துக் கொண்டிருக்கிறது. வணிக நிறுவனங்களில் பிற மொழிகளில் வைக்கப்படும் பெயர் பலகைகளை நீக்க 30 நாட்கள் அவகாசம் கொடுங்கள்.

தமிழர்கள் தமிழ் மொழியை அந்நிய மொழி கலப்பின்றி பேச வேண்டும்; வணிக நிறுவனங்களில் பிற மொழிகளில் வைக்கப்படும் பெயர் பலகைகளை நீக்க 30 நாட்கள் அவகாசம் கொடுங்கள். தானாக அவை அகற்றப்படும்:-
மயிலாடுதுறையில் மருத்துவர் ராமதாசு பேச்சு.

 

பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை சார்பில், அறக்கட்டளையின் நிறுவனர் மருத்துவர் ராமதாசு,
தமிழ்நாட்டில் அனைத்து துறைகளில் இருந்தும் காணாமல் போன “தமிழைத் தேடி” என்ற விழிப்புணர்வு பரப்புரை பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

பிப்ரவரி 21-ஆம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தொடங்கிய இந்த பிரச்சார பயணம் வெள்ளிக்கிழமை மயிலாடுதுறையில் நடைபெற்றது.

இதையொட்டி, மயிலாடுதுறை சின்னக்கடைத் தெருவில் நடைபெற்ற கூட்டத்திற்கு பொங்கு தமிழ் அறக்கட்டளை தலைவர் ஜி.கே.மணி தலைமை வகித்தார். தருமபுரம் ஆதீனக் கட்டளை ஸ்ரீமத் சிவகுருநாத தம்பிரான் சுவாமிகள் மற்றும் தமிழர்கள் பலர் கலந்து கொண்டனர்.


இக்கூட்டத்தில் பொங்கு தமிழ் அறக்கட்டளை நிறுவனர் மருத்துவர் ராமதாசு பேசுகையில், தமிழை வளர்ப்பதில் சைவ ஆதீனங்களின் பங்கு அளப்பரியது. குறிப்பாக தருமபுரம் ஆதீனம் தமிழ் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றி வருகிறது. ஆனால் அறிஞர்கள் முதல் சாமானியர்கள் வரை தற்போது யாரும் அந்நிய மொழி கலப்பின்றி பேசுவதில்லை. இதன் காரணமாகவே “தமிழைத் தேடி” என்ற இந்த விழிப்புணர்வு பரப்புரை பயணத்தை மேற்கொண்டுள்ளேன். மெல்லத் தமிழ் இனி சாகும் என நீலகண்ட சாஸ்திரி கூறினார். ஆனால் தமிழ் தற்போது வேகமாக செத்துக் கொண்டிருக்கிறது. வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகளை தமிழில் வைக்க தமிழ் அறிஞர்கள் வலியுறுத்த வேண்டும். அதனை அகற்ற 30 நாட்கள் அவகாசம் கொடுங்கள். அவை தானாக அகற்றப்படும். கரோனா பெருந்தொற்று காலத்தில் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு நூல்களை படித்துப் பார்த்தேன். எவ்வளவு அருமையான மொழி. இந்த மொழி அழிவதற்கு யாரும் விட்டு விடக்கூடாது என்றார். இக்கூட்டத்தில் பாமக நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *