யோகாசனத்தை கற்றுகொள்ள ஆர்வத்தை தூண்டும் வகையில் திரைப்பட பாடலுக்கு ஏற்ப மாணவ மாணவிகளின் யோகாச நடனம் .
மயிலாடுதுறை அருகே லட்சுமிபுரத்தில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற ஆண்டுவிழாவில் உடல் ஆரோக்கியமாக இருக்க யோகாசனத்தை கற்றுகொள்ள வலியுறுத்தி மாணவ மாணவிகளிடமும், பெற்றோர்களிடமும் ஆர்வத்தை தூண்டும் வகையில் திரைப்பட பாடலுக்கு ஏற்ப மாணவ மாணவிகளின் யோகாச நடனம் பார்வையாளர்களை கவர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தியது:-
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே லட்சுமிபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் (குட் சமாரிட்டன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி) ஆண்டு விழா இன்று நடைபெற்றது. இதில், மாணவர்கள் நிகழ்த்திய கலைநிகழ்ச்சிகளை பெற்றோர்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர். வில்லுபாட்டு, கரகாட்டம் நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகள், பரதம் உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதில் குறிப்பாக பல்வேறு இடங்களில் சிலம்பாட்டப்போட்டியில் வென்ற மாணவனின் சிலம்பாட்டம், உடல் ஆரோக்கியமாக இருக்க யோகாசனத்தை கற்றுகொள்ள வேண்டும் என்று மாணவ மாணவிகளிடமும், பெற்றோர்களிடமும் ஆர்வத்தை தூண்டும் வகையில் திரைப்பட பாடலுக்கு ஏற்ப மாணவ மாணவிகள் பல்வேறு யோகாசனங்களை செய்தபடி நடனமாடியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து யோகாசனத்தின அவசியத்தை வலியுறுத்தியது.