ஓசூரில் வழக்கறிஞர் கண்ணன் வெட்டப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து மயிலாடுதுறையில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இரண்டு நாட்கள் பணிகளைப் புறக்கணித்து வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து, நீதிமன்ற வளாகம் முன்பு மாயூரம் வழக்கறிஞர்கள் சங்கம் மற்றும் மயிலாடுதுறை வழக்கறிஞர்கள் சங்கங்களை சேர்ந்த வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். அப்போது தமிழக அரசு உடனடியாக வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை இயற்ற வேண்டும் என வழக்கறிஞர்கள் வலியுறுத்தினர்.