மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட உத்திரங்குடி, இலுப்பூர், விளாகம், ஈச்சங்குடி ஆகிய நான்கு ஊராட்சிகளில் ரூ.31 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட நான்கு புதிய மின்மாற்றிகளை பொது மக்களின் பயன்பாட்டிற்காக மயிலாடுதுறை மாவட்ட திமுக செயலாளரும், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம்.முருகன் தொடங்கி வைத்தார்.
இதில், மின்வாரிய செயற்பொறியாளர் ரேணுகா உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் திமுக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.