தூய்மையே சேவை என்ற திட்டம் மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நடைபெறும் மெகா தூய்மை இயக்கம் ஆகும். இத்திட்டத்தில் மயிலாடுதுறை தாலுகா மன்னம்பந்தல் ஊராட்சியில் தூய்மையே சேவை முகாம் ஊராட்சித் தலைவர் பிரியா பெரியசாமி தலைமையில் நடைபெற்றது. இதில், மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் சந்தானம் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, ஊராட்சியில் மெகா தூய்மைப் பணிகளை தொடக்கி வைத்து, மரக்கன்றுகள் நடும் பணியை தொடக்கி வைத்தார். இதில், தூய்மைப் பணியாளர்கள், பணி பொறுப்பாளர்கள் கலந்துகொண்டு 50-க்கு மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். இதில், வட்டார வளர்ச்சி அலுவலர் சுதாகர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.