பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியர்கள்:- திமுக மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் எம்எல்ஏ நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து போராட்டம் வாபஸ்:-

செய்திகள்

மயிலாடுதுறையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியர்கள்:- திமுக மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் எம்எல்ஏ நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து போராட்டம் வாபஸ்:-

15 ஆண்டு காலத்திற்கு மேலாக பணியாற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு பணி மாறுதல் வழங்க வேண்டும், ஊழியர்களிடம் அராஜகப் போக்கில் செயல்படும் மயிலாடுதுறை ஒன்றிய குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் கீர்த்திகா, சீர்காழி ஒன்றிய இளநிலை உதவியாளர் கங்கா நரசிம்மராஜ் ஆகியோரை மயிலாடுதுறை மாவட்டத்திலிருந்து வெளியேற்ற வேண்டும், அங்கன்வாடி மையத்துக்கு தமிழக அரசு அண்மையில் அறிவித்த இலவச சமையல் எரிவாயு சிலிண்டரை உடனே வழங்க வேண்டும், 5 ஆண்டு காலத்திற்கு முன்னதாக வழங்கப்பட்ட செல்போன்களை மாற்றித் தர வேண்டும் ஆகிய கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் சங்கத்தினர் சுமார் 150 பேர் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயிலின் முன்பு முற்றுகையிட்டு அமர்ந்து மாவட்ட தலைவர் பேபி தலைமையில் தொடர் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர்.

போராட்டம் 2 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த நிலையில், அவ்வழியாக திமுக கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்ற திமுக மாவட்ட செயலாளரும், பூம்புகார் சட்டப்பேரவை உறுப்பினருமான நிவேதா எம்.முருகன், ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடைபெறுவதைக் கண்டு காரை நிறுத்திவிட்டு, அங்கன்வாடி ஊழியர்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். தொடர்ந்து, உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அவர் பேச்சுவார்த்தை நடத்தினார்.

பின்னர், இரண்டு நாட்களுக்குள் ஊழியர்களின் அனைத்து கோரிக்கைகளுக்கும் நிரந்தர தீர்வு ஏற்படுத்தித் தரப்படும் என அவர் அளித்த வாக்குறுதியை ஏற்று போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் கலைந்து சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *