ஓசோன் காற்றின் மகத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி ஆகாயத்தில் பலூனை பறக்கவிட்டனர்.

செய்திகள்

தரங்கம்பாடி கடற்கரையில் ஓசோன் செறிவு மண்டல விழிப்புணர்வு நிகழ்ச்சி கடற்கரையில் ஓசோன் காற்றின் மகத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி ஆகாயத்தில் பலூனை பறக்கவிட்டனர்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி கடற்கரையில் ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மாதங்களில் ஓசோன் காற்று அதிகமாக வீசுவதாக ஆட்சியாளர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஓசோன் காற்றை சுவாசித்தால் உடல் நலத்திற்கு நன்மை தரக்கூடும் என்பதால் ஓசோன் காற்றை சுவாசிக்க சுற்றுலா பயணிகள் மற்றும்  நாட்டின் பல்வேறு பகுதிகளில் மட்டும்மின்றி  வெளிநாடுகளில் இருந்து ஏராளமானோர் இந்த மூன்று‌ மாதங்களில் மட்டும் அதிகளவில் வருகை தந்து பயன்பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் ஓசோன் காற்றின் நன்மைகள் குறித்து பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சுற்றுலா தலமான தரங்கம்பாடி கடற்கரையில் டேனிஷ் கோட்டையையொட்டி மாவட்ட நிர்வாகம் சார்பில் ஓசோன் செறிவு மண்டல விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் ஆகியோர் கலந்து கொண்டு ஓசோன் காற்றின் மகத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆகாயத்தில் பலூனை பறக்கவிட்டனர். தொடர்ந்து ஓசோன் காற்றின் நன்மைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் விளக்கி பேசினர்.

அதனைத் தொடர்ந்து கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. முன்னதாக தரங்கம்பாடி பேரூராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களின்‌ சேவையை பாராட்டி மாவட்ட ஆட்சியர் சால்வை அணிவித்து கவுரவித்தார். இதில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர், பேரூராட்சி தலைவர், செயலாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *