மயிலாடுதுறை நகர பாஜக சார்பில் தேசிய ஜனநாயக கூட்டணியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் ம.க.ஸ்டாலின் பாஜக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் அறிமுக கூட்டமானது மயிலாடுதுறை நாராயணி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ம.க.ஸ்டாலின் பேசுகையில் இந்தியா வளர்ச்சி அடைய வேண்டுமானால் மீண்டும் நரேந்திர மோடி தான் பாரத பிரதமராக வேண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக சார்பில் போட்டியிடும் நான் ஒரு கம்யூனிஸ்ட் இயக்கத்தைச் சார்ந்த குடும்பத்தைச் சேர்ந்தவன் அந்த வகையில் மக்கள் பிரச்சனைகளுக்காக பல போராட்டங்களை நடத்தி வருகிறேன்.
மயிலாடுதுறை தொகுதியில் நிச்சயமாக வெற்றி அடைவேன் மத்திய அரசால் கொண்டுவரப்படும் அனைத்து திட்டங்களையும் முழுமையாக மக்களுக்கு கிடைப்பதற்கு கடுமையாக உழைப்பேன் எனவும் பாட்டாளி மக்கள் கட்சி என்பது பலாப்பழம் போன்றது பலாப்பழத்தின் தோல்கள் கரடு முரடாக இருப்பது போன்று எங்களது போராட்டங்கள் இருந்தாலும் அந்தப் பழத்தின் உள்ளே இருப்பது தேன் சுவையுடன் கூடிய இனிப்பான பழம்தான் அப்படி இனிமையாகவும் மக்களுக்கு பிரச்சனை என்றால் போராட கூடிய வல்லமையை பெற்றவராக நாங்கள் இருந்து வருகிறோம் நிச்சயமாக நமது கூட்டணி வெற்றி அடையும் மீண்டும் மோடி வேண்டும் மோடி என்ற ஒரே நிலைப்பாடோடு இணைந்து பணியாற்றி மயிலாடுதுறை தொகுதியில் மாம்பழம் சின்னத்தில் வாக்களித்து பெருமை சேர்ப்போம் எனவும் கூறினார்.
முன்னதாக வேட்பாளருக்கு பாஜகவினர் பட்டாசு வெடித்து மாலை அணிவித்து ஆரத்தி எடுத்து அவரை வரவேற்றனர். இதில் ஏராளமான பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.