பிரதமர் மோடி, பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோருக்கு கோவிலில் சங்கல்பம் செய்து திறந்தவெளி வாகனத்தில் பிரச்சாரத்தை துவங்கிய மயிலாடுதுறை பாமக வேட்பாளர் ம.க.ஸ்டாலின்:-

செய்திகள்

பிரதமர் மோடி, பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோருக்கு மாதானம் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் சங்கல்பம் செய்து வழிபாடு மேற்கொண்டு திறந்தவெளி வாகனத்தில் பிரச்சாரத்தை துவங்கிய மயிலாடுதுறை பாமக வேட்பாளர் ம.க.ஸ்டாலின்.

ஏப்ரல் 19-ஆம் தேதி தமிழகத்தில் முதல் கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது அனைத்து கட்சி வேட்பாளர்களும் வேட்பு மனு தாக்கல் செய்து தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மயிலாடுதுறை பாராளுமன்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர் ம.க.ஸ்டாலின் இன்று சீர்காழி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கொள்ளிடம் ஒன்றியத்தில் வாக்கு சேகரிப்பை துவங்கினார். முன்னதாக சீர்காழி அடுத்த மாதானம் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் பிரதமர் மோடி பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோருக்கு சங்கல்பம் செய்து கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் வழிபாடு செய்தார்.

இந்நிகழ்ச்சியில் வன்னியர் சங்க மாநிலத் தலைவர் பு.தா.அருள்மொழி மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், தமிழ் மாநில காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பாமக வேட்பாளருக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். அதனை தொடர்ந்து திறந்தவெளி வாகனத்தில் பொதுமக்களுக்கு துண்டு பிரசாரங்களை வழங்கி தீவிர வாக்கு சேகரிப்பில் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் ஈடுபட்டு வருகிறார். கொள்ளிடம் ஒன்றியத்துக்குட்பட்ட மாதானம், பச்சை பெருமாநல்லூர், கன்னிக்கிணியார் கோவில், உமையாள்பதி, வாடகால்  உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். பொதுமக்கள் தங்கள் ஆதரவினை தெரிவிக்கும் விதமாக வேட்பாளருக்கு ஆரத்தி எடுத்தும், சால்வை அனிவித்தும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *