வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட வாக்காளர்களை வாக்கு அளிக்க அனுமதிக்க கோரி தேர்தல் அன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட- பாமக மாவட்ட தலைவர் உள்ளிட்ட 100 பேர் மீது வழக்குப்பதிவு.

செய்திகள்

வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட வாக்காளர்களை வாக்கு அளிக்க அனுமதிக்க கோரி தேர்தல் அன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட- பாமக மாவட்ட தலைவர் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் உள்ளிட்ட 100 பேர் மீது மயிலாடுதுறை காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு:-

மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி மயிலாடுதுறையில் தேர்தல் அன்று மகாதானத்தெரு டி.பி.டி.ஆர் தேசிய மேல்நிலைப்பள்ளியில் வாக்குசாவடி 143, 144 இல் வாக்காளர் பட்டியலில் 400-க்கும் மேற்பட்டவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது. மகாதானத்தெரு, பட்டமங்கலத்தெரு உள்ளிட்ட பகுதிகளை சார்ந்த  வாக்காளர்கள் இதனை அறியாமல் ஓட்டு போட வந்தபோது தங்களது பெயர்கள் பட்டியலில் இல்லாதது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் இருந்து தங்களது பெயர்கள் நீக்கப்பட்டதை கண்டித்தும், தங்களுக்கு வாக்களிக்க அனுமதி வழங்க கோரியும் மகாதானத்தெரு டி.பி.டி.ஆர். பள்ளி வாக்குச்சாவடி முன்பு தேர்தல் அன்று காலை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களுக்கு ஆதரவாக தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி பாமக வேட்பாளர் ம.க.ஸ்டாலின் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் கலந்து கொண்டனர். இதனை அடுத்து கூடுதல் ஆட்சியர் சபீர் ஆலம் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் யுரேகா உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக மயிலாடுதுறை காவல்நிலைய போலீசார் சட்டவிரோதமாக கூடி பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் சாலை மறியலில் ஈடுபட்டதாக 143, 341 ஆகிய சட்ட பிரிவுகளின் கீழ் பாமக மாவட்ட தலைவர் பழனிச்சாமி, மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் உள்ளிட்ட 100 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *