தருமபுர ஆதீன மடாதிபதியின் பட்டணப்பிரவேச நிகழ்ச்சிக்கு தடை விதிக்க கோரி விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் மற்றும் அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம்.

செய்திகள்

மயிலாடுதுறையில் தருமபுர ஆதீன மடாதிபதியின் பட்டணப்பிரவேச நிகழ்ச்சிக்கு தடை விதிக்க கோரி விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் மற்றும் அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம்:-

மயிலாடுதுறையில் பழமை வாய்ந்த தருமபுர ஆதீன மடத்தில் ஆதீன மடாதிபதி சிவிகை பல்லக்கில் எழுந்தருளி பக்தர்கள் சுமந்து செல்ல பட்டணபிரவேச விழா பாரம்பரிய முறைப்படி பல நூற்றாண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த 2022-ஆம் ஆண்டு திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மனிதனை மனிதனே சுமக்கும் பட்டிணப்பிரவேச விழாவிற்கு தடை விதிக்க வேண்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் பட்டினபிரவேச விழாவிற்கு அப்போது இருந்த கோட்டாட்சியர் தடை விதித்த நிலையில் பின்னர் பல்வேறு கட்ட போராட்டங்களுக்குப் பிறகு தடை நீக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த ஆண்டு தருமபுர ஆதீன மடாதிபதி பட்டணபிரவேச விழா நாளை நடைபெற உள்ள நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திராவிடர் விடுதலைக் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், மக்கள் அதிகாரம் தமிழ் மண் தன்னுரிமை இயக்கம், உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் மற்றும் அமைப்பினர் மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மனிதனை மனிதனே சுமப்பதா? என கேள்வி எழுப்பி தருமபுர ஆதீன மடாதிபதியின் பட்டணப்பிரவேசம் நிகழ்ச்சிக்கு தமிழக அரசு உடனடியாக தடை விதிக்க கோரியும், ஆதீனத்தை கண்டித்தும்  கண்டன உரை மற்றும் முழக்கமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *