தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் ம.க.ஸ்டாலின் மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் சுற்றுவட்டார பகுதிகளில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். செம்பனார்கோயில் அருகே பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த வேட்பாளர் ம.க.ஸ்டாலினை சென்னை வானிலை மைய முன்னாள் இயக்குனர் ரமணன் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து அவர் பேசுகையில் ம.க.ஸ்டாலின் இன்றோ நேற்றோ எனக்கு பரீட்சையமானவர் அல்ல ஆரம்ப கால முதலேயே எங்களுக்குள் நட்பு அதிகம் ம.க.ஸ்டாலின் அடுத்தவருக்கு உதவும் மனப்பான்மை கொண்டவர். இப்பேற்பட்ட மனிதர்களை பார்ப்பது அரிது. எனது நண்பரான ம.க.ஸ்டாலின் நிச்சயமாக இந்த மக்களவை தேர்தலில் வெற்றி அடைவார். அவர் வெற்றி வேட்பாளர் எனவும் அரவணைத்து பாராட்டினார். முன்னதாக வேட்பாளர் ம.க.ஸ்டாலின் ரமணனுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றார்.