தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் ஈரோடு மாவட்டத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மகளிர் குழுவிற்கு இன்று கடனுதவிகளை வழங்கினார். அதன் தொடர்ச்சியாக, மயிலாடுதுறை மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் உதவிகள் மற்றும் மதி எக்ஸ்பிரஸ் மின் வாகனங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி, எம்எல்ஏக்கள் எஸ்.ராஜகுமார், நிவேதா எம்.முருகன் ஆகியோர் கலந்துகொண்டு 10,353 மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு ரூ.40.69 கோடி மதிப்பிலான வங்கி கடனுதவிகளை வழங்கினர். இதில், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனர்.