பரதநாட்டிய சலங்கை பூஜை கலைநிகழ்ச்சியில் மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சி காண்போரை வெகுவாக கவர்ந்தது:-

செய்திகள்

எனக்கென குடும்பம் கிடையாது மயிலாடுதுறை மக்களை நம்பி வந்துள்ளேன் நீங்கள் தான் என் குடும்பம் என்று செம்பனார்கோவிலில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் மயிலாடுதுறை நாடாளுமன்ற காங்கிரஸ் வேட்பாளர் சுதா கனத்த குரலில் கண்ணீர் தழும்ப பேச்சு:-

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் மயிலை சப்தஸ்வரங்கள் சார்பில் பரத நாட்டிய கலை நிகழ்ச்சி நடைபெற்றது. பரதம் பயின்ற மாணவிகளின் முதல் அரங்கேற்ற நிகழ்ச்சியாக சலங்கை பூஜை விழா துவங்கியது. இதில் பரதம் பயின்ற மாணவிகளின் பரதநாட்டியம் புஷ்பாஞ்சலி, ஓம்கார நாதம் திருக்கோணேஸ்வரர் கௌத்துவம், கொண்டை முடி அலங்கரித்து, தில்லானா உள்ளிட்ட நாட்டிய நாடகங்கள் மற்றும் பரதநாட்டியம் நாட்டை ராகம் நீதிமதி ராகம், ஹம்சா நந்தி ராகம் புல்லித்த ராகங்களில் ஆதிதாளம் மிஸ்ராசபு ராகங்களில் கீர்த்தனை பாடல்களுக்கு நடனம், தனிப்பாடல் நடனம் என்று பலவகையான பரதநாட்டிய கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

 

இதில் பாடலுக்கேற்ற மாணவர்கள் அபிநயங்கள் உடன் ஆடிய காட்சி பார்ப்போரை பிரமிக்கச் செய்தது. மாணவிகளுக்கு சான்றிதழும் பதக்கங்களும் வழங்கப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *