இந்திய அரசின் ஆயுஷ் துறையின் மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி மையம் மற்றும் தேசிய சித்த மருத்துவ நிறுவனம் இணைந்து கடந்த மாதம் 24-ஆம் தேதி சித்த மருத்துவ விழிப்புணர்வு பைக் பேரணியை டெல்லியில் தொடங்கினர்.
டெல்லியில் தொடங்கி 21 நகரங்கள் வழியாக 3333 கிலோமீட்டர் தூரத்துக்கு பயணித்து இந்த பேரணி கன்னியாகுமரியில் நிறைவடைய உள்ளது. 22 பேர் கலந்து கொண்டுள்ள இந்த பேரணி மயிலாடுதுறையை வந்தடைந்தது. மயிலாடுதுறையில் இந்த பேரணிக்கு மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் பத்மநாபன் புதுச்சேரி சித்த மருத்துவ மண்டல ஆராய்ச்சி நிலைய ஆராய்ச்சி அலுவலர் லாவண்யா ஆகியோர் வரவேற்பு அளித்தனர். பேரணியில் வந்தவர்கள் மயிலாடுதுறையில் நடைபெற்று வரும் புத்தகக் கண்காட்சிக்கு சென்று அங்கு சித்த மருந்துகள் அடங்கிய “கிட்”களை பொது மக்களுக்கு வழங்கினர். இந்த பேரணி தஞ்சாவூர் வழியாக சென்று பிப்ரவரி 11ஆம் தேதி கன்னியாகுமரியில் நிறைவடைய உள்ளது.