மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே கடலங்குடி பகுதியில் உள்ள கலைவாணி மெட்ரிக் தனியார் பள்ளியில் உலக சிலம்பம் தினத்தினை முன்னிட்டு 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் சிலம்பம் சுற்றியபடி பேரணியாக சென்றனர். நிகழ்ச்சியை மணல்மேடு காவல் ஆய்வாளர் ராஜா குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.
அப்போது, ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைவரும் தவறாமல் வாக்களித்து 100% வாக்குப்பதிவு என்ற இலக்கை அடைய வேண்டும் என பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்தார். பின்னர் பள்ளியில் துவங்கிய பேரணி கடைவீதி மற்றும் முக்கிய வீதிகள் வழியாக மாணவர்கள் சிலம்பம் சுற்றியபடி சென்று பொதுமக்களுக்கு வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.