மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் 39-ம் ஆண்டு இலக்கிய மன்ற விழா மற்றும் மாணவ – மாணவிகளுக்கான பன்முக திறன் போட்டிகள் பள்ளியின் தாளாளர் ராஜ்கமல் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் விஜய் டிவி புகழ் சூப்பர் சிங்கர் செல்வி அருணா கலந்து கொண்டு மாணவர்களுக்கிடையே சிறப்புரை ஆற்றினார். மேலும் குழந்தை வளர்ப்பதின் விதம் குறித்து பெற்றோரிடம் கலந்துரையாடினார். இந்நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு பல்வேறு பன்முகத்திறன் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நினைவு பரிசும், சான்றிதழும் வழங்கப்பட்டது.