சீர்காழி அருகே திருவெண்காடு ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் அமைச்சர் மெய்யநாதன் பங்கேற்ப்பு.

செய்திகள்

சீர்காழி அருகே திருவெண்காடு ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் அமைச்சர் மெய்யநாதன், மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர் பங்கேற்ப்பு.

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காடு ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, அமைச்சர் மெய்யநாதன், பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

தமிழக அரசின் மகளிர் உரிமைத்தொகை திட்டம், கிராம சபை கூட்டம் தொடர்பாக முதல்வர் பேசும் கானொலியை தொடர்ந்து கிராம சபை கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் வாசிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் கிராம மக்கள் பங்கேற்று திருவெண்காடு மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறையாக உள்ளதாகவும்,  பெருந்தோட்டம் ஏரியை சுற்றுலா தளமாக ஆக்க வேண்டும், மயிலாடுதுறை மாவட்டத்திற்கான மருத்துவ கல்லூரியை திருவெண்காட்டில் அமைக்க வேண்டும், அரசு உயர் நிலைப்பள்ளியை மேல் நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.

மேற்கண்ட கோரிக்கைகள் குறித்து உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்தனர். முன்னதாக உழவர் நலத்துறை சார்பாக நெல் ரகங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் உள்ளிட்டவைகள் காட்சிபடுத்தப்பட்டது.

அங்கன்வாடி பணியாளர்கள் சார்பில் சத்தான உணவு  காய்கறிகளில் உள்ளது என்பதை உணர்த்தும் வகையில் காய்கறிகள் உள்ளிட்ட பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டது.

கூட்டத்தில் பேசிய அமைச்சர் மெய்யநாதன் 100 நாள் வேலை திட்டத்தில் நாட்கள் அதிகப்படுத்தப்படும், டெங்கு பரவாமல் இருக்க தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும். திருவெண்காடு அரசு மருத்துவமனையில் கூடுதலாக மருத்துவர்கள் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும், பெருந்தோட்டம் ஏரியை சுற்றுலாத்தலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். கலைஞர் உரிமைத்தொகை திட்டத்தில் விடுபட்டவர்கள் மீண்டும் வார்டு உறுப்பினர்கள் மூலம் விண்ணப்பிக்க  நடவடிக்கை மேற்கொள்ளப்படும்  என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *