சுவையான சமையல் சத்துணவை சாப்பிட்டு ஊழியர்களை பாராட்டிய எம்எல்ஏ!

செய்திகள்

சுவையான சமையல் சத்துணவை சாப்பிட்டு ஊழியர்களை பாராட்டிய எம்எல்ஏ!

மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோயில் அடுத்த புங்கனூர் ஊராட்சியில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில்  200-க்கும் மேற்பட்ட மாணவ – மாணவிகள் பயின்று வருகின்றனர். அப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் அங்கு சென்றிருந்தார். அப்போது நிகழ்ச்சி முடித்துவிட்டு புறப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் பள்ளி மாணவர்களுக்கு சத்துணவு வழங்குவதை கண்டார். உடனடியாக சத்துணவு பரிமாறும் இடத்திற்கு சென்று உணவினை வாங்கி சாப்பிட்டு தரம் பார்த்தார். உணவு தரமாகவும், சுவையாகவும் இருப்பதாகவும் கூறி சத்துணவு சமையல்  ஊழியர்களுக்கு சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தார்.

பல்வேறு அரசு பள்ளிகளில் சத்துணவானது தரமானதாகவும், சுவையானதாகவும் இருப்பது இல்லை என்ற குற்றச்சாட்டு நிலவும் நிலையில், இப்பள்ளியில் உணவு தரம், சுவை குறித்து சட்டமன்ற உறுப்பினர் பாராட்டியதை தொடர்ந்து பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் பலரும் சத்துணவு ஊழியர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.