மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான ஸ்ரீ சட்டைநாதர் கோவில் அமைந்துள்ளது இங்கு திருநிலை நாயகி அம்பாள் சமேத பிரம்மபுரீஸ்வரர், சட்டைநாதர், தோனியப்பர் தனி சன்னதியில் அருள்பாளித்து வருகின்றனர். சித்திரை திருவிழா கடந்த 14-ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருமுல்லை பால் தேருவடச்சான் எனும் சகோபுரம், திருக்கல்யாணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. 13-ம் நாளான இன்று தெப்ப உற்சவம் வெகு விமர்சியாக நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் சுவாமி அம்பாள் தெப்பத்தில் எழுந்தருளி சிறப்பு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தீர்த்த குளத்தில் மூன்று முறை தெப்பம் வலம் வந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று தெப்போற்சவ விழாவில் சுவாமி அம்பாளை தரிசனம் மேற்கொண்டனர்.