மயிலாடுதுறை அருகே அகரக்கீரங்குடி கிராமத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை சார்பில் நடைபெற்ற பொது மருத்துவ முகாமை எம்எல்ஏ ராஜகுமார் தொடங்கி வைத்தார்
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த அகரக்கீரங்குடி கிராமத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின்கீழ் பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் பொதுமக்களுக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, பெண்களுக்கான கர்ப்பவாய் பரிசோதனை, புற்றுநோய் பரிசோதனை உள்ளிட்டவை தொடர்பான ஆலோசனைகள் வழங்கப்பட்டது. ஊராட்சித் தலைவர் கயல்விழி சரவணன் தலைமையில் நடைபெற்ற இம்முகாமை மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினர் ராஜகுமார் தொடக்கி வைத்து பார்வையிட்டார். இதில் ஆண் -பெண் இருபாலரும் 300-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு சிகிச்சை மற்றும் ஆலோசனைகளை பெற்று பயனடைந்தனர்.