மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான குருஞானசம்பந்தர் மிஷன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி கடந்த 38 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியின் 38-ஆம் ஆண்டு விளையாட்டு விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில், மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா கலந்துகொண்டு விளையாட்டுப் போட்டியை கொடியசைத்து துவங்கி வைத்தார். தொடர்ந்து, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். இதில், மாணவ-மாணவிகள் நிகழ்த்திய யோகாசன நிகழ்ச்சி பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் அமைந்தது. மேலும், மாணவ-மாணவிகள் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.