சீர்காழி சட்டநாதர் கோவிலில் தமிழக முதல்வரின் மகள் சுவாமி தரிசனம்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான திருநிலை நாயகி அம்பாள் உடனாகிய பிரம்மபுரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. தேவாரப் பாடல் பெற்ற மலை கோவிலான இங்கு சிவபெருமான் மூன்று நிலைகளில் எழுந்தருளி அருள் பாலித்து வருகிறார்.
மேலும் தேவார நால்வர்களுள் திருஞானசம்பந்தர் அவதார ஸ்தலமான இக்கோவிலில் காசிக்கு இணையான அஷ்ட பைரவர்கள் தனி சன்னதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றனர். இத்தகைய சிறப்புமிக்க கோவிலில் தமிழக முதல்வர் ஸ்டாலின் மகள் செந்தாமரை சுவாமி அம்பாள் சட்டநாதர் மற்றும் அஷ்ட பைரவர் சன்னதிகளுக்கு சென்று சிறப்பு வழிபாடு செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து சிவாச்சாரியார்கள் கோவில் பிரசாதங்களை வழங்கினர்.