மயிலாடுதுறை மணல்மேடு அரசு கலைக்கல்லூரி முன்பாக இந்திய மாணவர் சங்கத்தினர் ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் அமுல் காஸ்ட்ரோ தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய அரசை கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர். கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாஜக அரசு இந்திய வரலாற்றை திருத்துவதற்கு முன்னோட்டமாக முகலாயர்களின் வரலாற்றை பாட புத்தகத்தில் இருந்து நீக்கி உள்ளதை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்