அரசு மதுபான கடை இயங்கும் சாலையில் முதல்வரின் துணைவியார் வரும் போது கூட கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை – ஒன்றிய குழு கூட்டத்தில் அதிமுக ஒன்றிய கவுன்சிலர் நடவடிக்கை எடுக்க வேண்டுகோள்

செய்திகள்

அரசு மதுபான கடை இயங்கும் சாலையில் முதல்வரின் துணைவியார் வரும் போது கூட கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை - ஒன்றிய குழு கூட்டத்தில் அதிமுக ஒன்றிய கவுன்சிலர் நடவடிக்கை எடுக்க வேண்டுகோள்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு கூட்டம் ஒன்றிய குழு தலைவர் கமலஜோதி தேவேந்திரன் தலைமையில் நடைபெற்றது.

இதில் திருநகரி அதிமுக ஒன்றிய கவுன்சிலர் நடராஜன் பேசுகையில் மங்கைமடம் பகுதியில் அதிமுக ஆட்சியின் போது ஒதுக்குப்புறமாக இருந்த அரசு மதுபான கடையை அகற்றிவிட்டு தற்போது மங்கைமடத்தில்  சீர்காழி செல்லும் பிரதான தேசிய நெடுஞ்சாலையில் அரசு மதுபான கடை இயங்கி வருகிறது. இதனால் தினந்தோறும் அதிகப்படியான விபத்துகளும், வாகன நெரிசல்களும் ஏற்படுகிறது. இப்பகுதி வழியாக பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவ –  மாணவிகள் பாதிக்கப்படுகின்றனர்.

மேலும் தமிழக முதல்வரின் துணைவியார் துர்கா ஸ்டாலின் திருவெண்காட்டில் உள்ள தனது வீட்டிற்கு வரும்போதும் போகும்போதும் கூட மதுபான கடை இருக்கும் சாலையில் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என அரசு அதிகாரிகளே புலம்பும் நிலையில் அரசு மதுபான கடை இயங்கி வருகிறது. இதனால் சுற்றியுள்ள கிராமங்களில் மது அருந்துவதற்கு பணம் இல்லாத நிலையில் வயல்கள் மற்றம் வீடுகளில் உள்ள மின்மோட்டார்கள் திருட்டு, இருசக்கர வாகனங்கள் திருட்டு உள்ளிட்ட பல்வேறு திருட்டு சம்பவங்களும் அரங்கேரி வருகிறது.  எனவே உடனடியாக அரசு மதுபானக் கடையை அகற்ற வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *