பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

செய்திகள்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் இரா. செல்வம் தலைமையில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநில தலைவர் பெ.இரா ரவி தொடங்கி வைத்தார். இதில் தொடக்கக் கல்வித் துறையில் பணிபுரியக்கூடிய 90% ஆசிரியர்களின் பதவி உயர்வு வாய்ப்பை பறிக்கக்கூடிய மாநில முன்னுரிமை வலியுறுத்தும் அரசாணை எண் 243 உடனடியாக ரத்து செய்ய வேண்டும் கடந்த 12.10.2023ல் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், பள்ளி கல்வி இயக்குனர், தொடக்கக் கல்வி இயக்குனர் ஆகியோர் டிட்டோஜாக் உயர்மட்ட குழுவுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் வாய்மொழியாக ஏற்றுக் கொண்டு காணொளி மற்றும் அச்சு ஊடகங்களுக்கு தெரிவித்த இ எம் ஐ எஸ் உள்ளிட்ட 12 கோரிக்கைகள் தொடர்பான எழுத்துப்பூர்வமான ஆணைகளை உடனடியாக வெளியிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மாநில முழுவதும் இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டது.

இந்தப் போராட்டத்தில் வட்டார செயலாளர் அறிவழகன் என்பவர் திமுக அரசு தேர்தல் வாக்குறுதி அளித்து கோரிக்கைகளை நிறைவேற்றாமல் ஏமாற்றுவதை கண்டித்து, எதிர்காலத்தில் திமுக அரசு தோல;வியை தழுவும் என்று பாடல் வாயிலாக தன் கண்டனத்தை பதிவு செய்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *