திமுக தனது தேர்தல் வாக்குறுதியை காற்றில் பறக்க விட்டதை சிம்பாலிக்காக உணர்த்திய இடைநிலை பதிவு மூப்பு இயக்க ஆசிரியர்கள்; மயிலாடுதுறை தொடக்கக்கல்வி அலுவலகம் முன்பு 311 என எழுதப்பட்ட பலூனை 50க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் காற்றில் பறக்கவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.லாடுதுறை ஓஎன்ஜிசி எரிவாயு குழாய்க்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள தார் தொழிற்சாலையை உடனடியாக மூட கிராமமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தல்:- – Copy

செய்திகள்

திமுக தனது தேர்தல் வாக்குறுதியை காற்றில் பறக்க விட்டதை சிம்பாலிக்காக உணர்த்திய இடைநிலை பதிவு மூப்பு இயக்க ஆசிரியர்கள்; மயிலாடுதுறை தொடக்கக்கல்வி அலுவலகம் முன்பு 311 என எழுதப்பட்ட பலூனை 50க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் காற்றில் பறக்கவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரஞ்சித்குமார் தலைமையில் நடைபெற்ற இதில் 50 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டு திமுக தேர்தல் வாக்குறுதி 311-இல் கூறியவாறு, சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி தொடர் முற்றுகை போராட்டத்தில் ஆசிரியர்களை கைது செய்வதைக் கண்டித்தும், விரைவாக சம ஊதியம் வழங்க கோரியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது திமுக தனது தேர்தல் வாக்குறுதி 311 ஐ காற்றில் பறக்க விட்டதை உணர்த்தும் விதமாக 311 என எழுதப்பட்ட பலூனை ஆசிரியர்கள் பறக்கவிட்டு தமிழக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *