தரங்கம்பாடி தாலுக்கா திருவிளையாட்டம் ஊராட்சியில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தலைமையில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாம். பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் மற்றும் பல்வேறு துறையை சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருவிளையாட்டம் ஊராட்சியில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில் எம்எல்ஏ நிவேதா முருகன் மற்றும் பல்வேறு துறையை சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர். முன்னதாக வேளாண்மைதுறை மற்றும் பொது சுகாதாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் திட்ட விளக்க கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது.
இதனை ஆட்சியர் நேரில் சென்று பார்வையிட்டு முகாமில் பங்கேற்று பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டார். மேலும் இந்த முகாமில் பல்வேறு துறைகளின் சார்பில் 122 பயனாளிகளுக்கு 27 லட்சத்து 82 ஆயிரத்து 214 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை மற்றும் சீர்காழி கோட்டாட்சியர் அர்ச்சனா உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் மற்றும் கிராம மக்கள் பங்கேற்றனர்.