ஒன்றிய பாஜக அரசின் ஆட்சியில் அரசு துறையை தனியார் மயமாக்குதல் விவசாயிகளுக்கு எதிரான சட்டங்கள், விலைவாசி உயர்வு, ஒன்றிய அரசின் பல்வேறு மக்கள் விரோத செயல்பாடுகளை கண்டித்து மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பாக தொழிலாளர் முன்னேற்ற சங்க மாவட்ட கவுன்சில் பொன் நக்கீரன் , விவசாய சங்க கூட்டமைப்பின் தலைவர் துரைராஜ் ஆகியோர் தலைமையில் சாலை மறியல் நடைபெற்றது. போராட்டத்தில் 200 பெண்கள் உட்பட 350 பேர் கலந்து கொண்டனர். ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர், போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் மயிலாடுதுறை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.