பத்து அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் பணிகளையும் புறக்கணித்து தொடர் காத்திருப்புப் போராட்டம்:-

செய்திகள்

பத்து அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் அனைத்துப் பணிகளையும் புறக்கணித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து தொடர் காத்திருப்புப் போராட்டம்:-

பட்டதாரி அல்லாத அலுவலர்களின் பணியிறக்க பாதுகாப்பு மற்றும் பதவி உயர்வை உத்தரவாதப்படுத்தி அரசாணை வெளியிட வேண்டும், இளநிலை, முதுநிலை பெயர் மாற்ற அரசாணையின் அடிப்படையில் விதிதிருத்த ஆணையை வெளியிட வேண்டும், அனைத்து நிலை அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் மற்றும் தனி ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் இன்று முதல் அனைத்து பணிகளையும் புறக்கணித்து, அலுவலக வாசலில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சங்கத்தின் மாவட்ட தலைவர் தென்னரசு தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் கலந்துகொண்டனர். இதனால், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழக்கமான பணிகள் பாதிக்கப்பட்டன. இதேபோல் கோட்டாட்சியர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகங்களிலும் இப்போராட்டம் நடைபெற்று வருகிறது.