கடல் ஆமைகள் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு முகாம். மீனவகிராம பிரதிநிதிகள் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்பு.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வனச்சரக சார்பாக வானகிரி மீனவர் கிராமத்தில் கடல் ஆமைகள் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
சீர்காழி வனச்சரகர் ஜோசப் டேனியல் தலைமையில் வானகிரி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற முகாமில் இளநிலை வன ஆராய்ச்சியாளர் முனைவர். தீபா ஜெயராமன் கலந்து கொண்டு கடல் ஆமைகள் பாதுகாப்பு குறித்து காணொளி காட்சி மூலம் மாணவ ,மாணவிகளுக்கு விளக்கம் அளித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். குறிப்பாக ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை அரிய வகை ஆமை இனமான ஆலிவ்ரெட்லி ஆமைகள் இக்கடற்கரை பகுதிக்கு முட்டைகள் இடுவதற்காக வரும் காலமாகும்.
இந்நேரத்தில் கடற்கரையோரம் வரும் ஆமைகளை வன விலங்குகள் மற்றும் சமூக விரோதிகளிடமிருந்து பாதுகாக்க வேண்டும், ஆமை முட்டைகள் குறித்து வனத்துறை அலுவலர்களிடம் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் உள்ளிட்ட ஆலோசனைகள் வழங்கப்பட்டது.