மயிலாடுதுறையில் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கங்களின் ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ள டிஜிட்டல் கிராப் சர்வே தொழில்நுட்பம் மற்றும் செயல் திட்டங்களை திரும்ப பெறக்கோரி தீர்மானம் நிறைவேற்றம்.
மயிலாடுதுறையில் தமிழ்நாடு அனைத்து கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆலோசனைக் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மாவட்ட துணை தலைவர் அருள் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தமிழகம் முழுவதும் உள்ள கிராம நிர்வாக அலுவலர்களுக்கு டிஜிட்டல் கிராப் சர்வே என்ற தொழில்நுட்பம் மற்றும் செயல் திட்டங்களை நடைமுறை படுத்தியுள்ளது. ஏராளமான குளறுபடியாக உள்ள இந்த திட்டத்தை செயல்படுத்த இயலாது என்பதனை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்காக கலந்தாலோசனை நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கம், மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் கலந்து கொண்டனர். இந்த திட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.